அம்பாறை + கண்டி வன்முறையின்போது, பொலிஸார் என்ன செய்தார்கள் - விசாரணை ஆரம்பம்
கடந்த நாட்களில் கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பாக விஷேட விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
குறித்த வன்முறைச் சம்பவங்களின் போது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் எவ்வாறு செயற்பட்டனர் வன்முறையாளர்களுடன் பொலிஸார் தொடர்புகளை கொண்டிருந்தனரா போன்ற விடயங்களை தெளிவு படுத்த எஸ்.ஐ.யூ பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த இரு மாவட்டங்களுக்கும் சிறப்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment