ஆஸ்திரேலியாவின் திருட்டு, எப்படி அகப்பட்டது தெரியுமா..?
புற்கள் அதிகமாக உள்ள ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு வேலை இல்லை என்பதால், ஆஸ்திரேலியாவின் மோசடியை பொறி வைத்து பிடித்துள்ளார் டி வில்லியர்ஸ்.
ஆஸ்திரேலியாவின் மோசடியை பொறி வைத்து பிடித்த டி வில்லியர்ஸ்
பால் டேம்பரிங்... இந்த வார்த்தைதான் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை படாய்படுத்திக் கொண்டிருக்கிறது.
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியா தொடக்க வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய கண்டுபிடிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா வீரர்களின் மோசடியை அம்பலப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஃபெனி டி வில்லியர்ஸ். இவர்தான் முன்னதாக ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்காக ஆஸ்திரேலியா அணி ஏதாவது செய்யும் என்று இவர் நம்பியுள்ளார். டிவி வர்ணனையாளராக செயல்பட்ட டி வில்லியர்ஸ் கேமராமேன்களை கவனமாக இருக்குமாறு அறிவுறித்தியுள்ளார்.
இதுகுறித்து ஃபெனி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘புற்கள் நிறைந்து காணப்படும் ஆடுகளத்தில் உடனடியாக பந்து ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஏற்ற வகையில் மாற்றமடைவது சாத்தியமற்றது. இது ஒன்றும் பாகிஸ்தான் பிட்ச் அல்ல. ஒவ்வொரு சென்டிமீட்டருக்கும் வெடிப்பு இருப்பதற்கு. ஆடுகளத்தில் புற்கள் நிறைந்து இருக்கிறது பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஏற்ற வகையில் பந்து ஒரு பக்கம் வெயிட்டாகவும், மறுமக்கம் எடை குறைவாகவும் இருக்க ஏதாவது செய்தாக வேண்டும்.
30 ஓவருக்கு முன்பே ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்தனர். அப்படியென்றால் அவர்கள் ஏதோ செய்திருக்கிறார்கள். கிரிக்கெட் பந்தில் இரும்பு கம்பிகள் அல்லது அது போன்ற பொருட்களை கொண்டு சேதப்படுத்தினால்தான் உடனடியாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்.
ஆஸ்திரேலியா வீரர்கள் 26, 27 மற்றும் 28-வது ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் செய்தால் அவர்கள் ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்க வேண்டும் என்று முன்னதாகவே கூறினேன். நான் எங்களுடைய கேமராமேன்களிடம், ஆஸ்திரேலிய வீரர்களை உற்று கவனிங்கள் என்றேன். அவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் தேடிக்கொண்டிருந்தார். பின்னர் பான்கிராப்ட் மாட்டிக்கொண்டார்’’ என்றார்.
இம்ரான் கான், வக்கர் யுனிஸ், இன்ஸ்மா-உள்-அக் போன்ற பலர் இதை செய்து கையும் களவுமாக பிடிபட்டவர்களே. ஆனால், ஒஸ்ரேலியா போல, இதை பாக்கிஸ்தான் பெரிது படுத்தவில்லை.
ReplyDeleteWhen It hurts them, can not tolerate... Why ?
ReplyDeleteThe mistake done by another, if not caught or exposed, it does not mean leave all to continue the same.
விளையாட்டிலும்இனவாதத்தை பரப்பும் தமிழ் பயங்கரவாதி Antony உன் கூட்டம் கடைசிவரை இப்படியே இருந்தால் ஈழமட்டுமல்ல தேங்காய் சிரட்டையும் கிடைக்காது
ReplyDelete@Gtx, நான் சொன்னது 100% உண்மை.
ReplyDeleteபயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் அடிப்படைவாதிகளுக்கு என்ன சொன்னாலும் இனவாத கண் கொண்டுதான் பார்ப்பார்கள்.
New invention by Ajan Anthony aiyya...
ReplyDelete