Header Ads



சம்சம் கிணற்றின் மறுசீரமைப்பு பணிகள் பூர்த்தி, புனித கஃபாவை சூழவுள்ள பகுதி அனைவருக்கும் திறப்பு


புனித கஃபாவை வலம்வரும் அதனை சூழவுள்ள (மதாப்) பகுதி நேற்று செவ்வாய்கிழமை வழிபாட்டாளர்களுக்கு திறக்கப்படவுள்ளது. இங்கு சம்சம் கிணற்றின் மறுசீரமைப்பு பணிகள் பூர்த்தியானதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு புனித பள்ளிவாசல்களுக்கான தலைமை மற்றும் நிதி அமைச்சுடன் மக்கா மாகாணம் ஒருங்கிணைந்து பெரிய பள்ளிவாசலுக்கு வருகைதருபவர்கள் உட்பட அனைவருக்கும் மதாப் மீண்டும் திறக்கப்படும் என்று சவூதி பிரஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபரில் சம்சம் கிணறை மறுசீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கத் கஃபாவை வலம்வரும் உம்றா யாத்திரிகர்களுக்கு மாத்திரமே மதாப் பகுதிக்குள் நுழைய சவூதி நிர்வாகம் அனுமதி அளித்தது.

வழிபாட்டளர்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்த சம்சம் கிணறை அணுகுவதற்கு பெரிய பள்ளிவாசல் வளாகத்திற்குள் ஐந்து சம்சம் நீர் விநியோக மையங்கள் நிறுவுவதற்கு 250க்கும் அதிகமான பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் 11 கிரேன்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

சம்சம் கிணரு கஃபாவில் இருந்து சுமார் 20 மீற்றர் தூரத்தில் உள்ளது. 30 மீற்றர்கள் மாத்திரமே ஆழம் கொண்ட இந்த கிணற்றில் இருந்து வினாடிக்கு 18.5 லீற்றர் நீர் இறைக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.