ஒரு சிங்கள ஆட்டோ, ட்ரைவர் செய்த உதவி
அஸ்ஸலாமு அலைகும்,
ழுஹர் தொழுவிப்பதற்காக திஹாரியிலிருந்து எல்லலமுல்ல ஜாமிஉத் தக்வா மஸ்ஜிதுக்கு நண்பன் ஆரிப் தவ்ஹீதி அவர்களுடன் மோட்டார் சைக்கிலில் சென்றேன். சென்று வரும் வழியில் நிட்டம்புவ டவுனைக் கடந்து வரும் போது எனது பேஸ் என்னை அறியாமல் விழுந்திருக்கிறது.
இதை அறியாத நாம் கிட்டத்தட்ட மல்வத்த வரை வந்து விட்டோம்.
எங்களை விரட்டி வந்த ஆட்டோ சாரதி “பொட்டக் நவத்தன்ன (கொஞ்சம் நிப்பாட்டுங்க)” என்று சொல்லி எங்களை ஓட்டேக் பண்ணி முன்னால் ஆட்டோவை நிறுத்தினார்.
நாமும் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் யோசிச்சோம். “ஏன் எங்கள நிறுத்தனும்? ஏதும் தவறு செஞ்சுட்டோமோ?!!” என்று.
அப்போது, இறங்கி வந்து, “ஒயாலகே பேஸ் எக தியனவத கியலா பலன்ன?” என்று கேட்டான். உடனே shirt பையைப் பார்த்தேன். எனது பேஸ் (purse) தான் விழுந்திருக்கிறது.
சிறு புன்முறுவலுடனும் மனிதத் தன்மை பறைசாற்றும் விதத்திலும் பேஸைக் கொண்டு வந்து தந்து விட்டு மீண்டும் நிட்டம்புவ பக்கமே திரும்பிச் சென்றார் அந்த ஆட்டோ சாரதி. அந்த ஆட்டோவில் பின்னால் ஒரு சிங்கள தாயும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
உண்மையில் இது அல்லாஹ்வின் உதவி. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன்.
அந்த சிங்கள ஆட்டோ சாரதி நல்லவன். மனிதத் தன்மையுள்ளவன்.
இது போன்று பல சிங்கள சகோதரர்கள் இலங்கை மண்ணில் இருக்கிறார்கள் என்பதை முஸ்லிம்களாகிய நாம் மறக்கக் கூடாது என்பதற்காகவே இதை இங்கு பதிந்தேன்.
நஸ்ரி ஜிப்ரி ஸலபி
25.03.2018
Post a Comment