இவன்தான் மாகந்துரே மதுஷ் . இத்தாலியில் இருப்பதாக தகவல்
காவல்துறையினரால் தேடப்பட்டுவருகின்ற மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலக குழுத் தலைவர் தற்போது இத்தாலியில் வசித்துவருவதாக காவல்துறை அதிரடிப்படை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பாதாள உலகத்தவர் இத்தாலியில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு செல்ல முயற்சித்துவருவதாக காவல்துறை அதிரடிப்படை உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
மாகந்துரே மதுஷ் என்று அழைக்கப்படும் குறித்த பாதாள உலகக் குழுத் தலைவர் ஏற்கனவே, டுபாயில் தங்கியிருந்த நிலையில், அவரை கைதுசெய்வதற்கான முயற்சிகளை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தபோதும், அந்த நாட்டு சட்டங்கள் காரணமாக அந்த முயற்சிகள் கைகூடவில்லை.
எனினும், இத்தாலியில் மாகந்துரே மதுஷ் தங்கியிருக்கும் இடம் முதற்கொண்டு அடையாளம் கண்டுள்ள நிலையில், எதிர்வரும் சில தினங்களில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக காவல்துறை உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மாகந்துரே மதுஷ் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும், இலங்கையில் முக்கிய பிரபு ஒருவரின் கொலைக்கு அவர் உதவிகளை வழங்கியுள்ளமையும் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக் காவல்துறை அறிவித்துள்ளது.
அத்துடன், சமயங் மற்றும் கொஸ் மல்லீ என அழைக்கப்படும் இரண்டு பாதாள உலகத்தவர்களின் கொலைகளில் மாகந்துரே மதுஷ் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment