Header Ads



கண்ணீருடன் லீமனின், முக்கிய அறிவிப்பு

அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக, டெரன் லீமன் அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினர் பந்தினை சேதப்படுத்திய பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் குறித்த சர்ச்சை கிரிக்கெட் அரங்கில் பெரும் பூதாகரமாக வெளியாகி அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் வீரர்களுக்கு ஐ.சி.சி. மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆகியன தண்டனைகள் வழங்கின.

இந்நிலையில், தண்டனை அறிவிக்கப்பட்டதன் பின்னர், குற்றம் சுமத்தப்பட்டிருந்த வீரர்களும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரும் ஊடகவியலாளர் சந்திப்பை முன்னெடுத்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர்  டெரென் லீமன் தனது பதவிவிலகலை அறிவித்தார். 

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

தென்னாபிரிக்க அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியுடன், அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகவுள்ளேன்.

இவ்வாறு நடந்துகொண்டமைக்கு மன்னிப்புக்கோருகின்றேன் என கண்ணருடன்  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

No comments

Powered by Blogger.