Header Ads



ஒரு கடதாசியினால் வெளியேறிய ரணிலும், சம்பந்தனும்

சிட்டைகளினூடாக தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே நேரத்தில் சபையை விட்டு வெளியேறிய சம்பவமொன்று, நேற்று (22) இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரும், பிரதமரும் தங்களுடைய ஆசனங்களில் இருந்தவாறு, சைகை காட்டிக்கொண்டிருந்தனர் அதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சிறிய கடிதாசியொன்றில் என்னமோ எழுதி, சபையின் பணியாளரூடாக, பிரதமருக்கு அனுப்பிவைத்தார்.

அதனைப் பெற்றுக்கொண்டு, வாசித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், பதிலுக்கு ஏதோவொன்றை எழுதி, அதே பணியாளரிடம் அனுப்பிவைத்தார்.

பதிலைவாசித்த சம்பந்தன், சைகையில் ஏதோ கூறினார். அதன்பின்னர், இருவரும் ஒரேநேரத்தில் சபையை விட்டு வெளியேறிவிட்டனர். அதன்பின்னர் மீண்டும் சபைக்கு வருகைதரவே இல்லை.

No comments

Powered by Blogger.