Header Ads



ஜெனீவாவில் நாம் தொடர்ந்தும், குற்றவாளிகளாக நிற்க முடியாது - சரத் அமுனுகம

ஜெனிவா மனித உரிமை  பேர­வை­யிலும் சர்­வ­தேச அமைப்­பு­க­ளுக்கும் கொடுத்த வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற அவ­சியம் எமக்கு இல்லை. அர­சியல் அமைப்பின் பிர­கா­ரமே எமது நகர்­வு­களை நாம் முன்­னெ­டுப்போம். 

அத்­துடன் சர்­வ­தேச புலி ஆத­ரவு அமைப்­பு­க­ளுடன் எந்த பேச்­சு­வார்த்­தைக்கும் இட­மில்லை என அமைச்சர் கலா­நிதி சரத் அமு­னு­கம தெரி­வித்தார். 

ஜெனி­வாவில் குற்­ற­வா­ளி­யாக இலங்கை நிற்கும் இறுதி  விஜயம் இது­வா­கவே இருக்க வேண்டும். இனி­யொ­ரு­போதும் சாட்­சிக்­கூண்டில் நிற்கும் பய­ணங்­க­ளுக்கு இட­மில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார்.  இது குறித்து அவர் மேலும் கூறு­கையில். 

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டம் இடம்­பெற்­றுள்­ளது. இதில் இலங்கை விவ­கா­ரங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இம்­முறை இலங்கை பிர­தி­நி­திகள் குழாமில் வெளி­வி­வ­கார அமைச்சின் குழு­வுடன் நாமும் கலந்­து­கொண்­டி­ருந்தோம். கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 1 ஆம் திகதி மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடரில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னங்கள் இலங்கை அர­சாங்­கத்­தி­னாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதற்­க­மை­யவே தொடர்ச்­சி­யாக இலங்கை விவ­கா­ரங்கள் குறித்து ஆரா­யப்­பட்டும் வரு­கின்­றது. இதில் மனித உரிமை  பேர­வையின் நிலைப்­பாடு, அங்­கத்­துவ நாடு­களின் நிலைப்­பாடு, இலங்கை அர­சாங்க பிர­தி­நி­தி­களின் நிலைப்­பாடு மற்றும் சிவில், அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் நிலைப்­பா­டுகள்  என்­பன ஆரா­யப்­படும். 

நாம் கடந்த காலங்­களில் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய சில முக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். குறிப்­பாக காணா­மல்­போனோர் குறித்த காரி­யா­லயம் அமைக்­கப்­பட்­டது. வலுக்­கட்­டா­ய­மாக காணமால் போனோர் குறித்த சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு வழங்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­பட்டு வரு­கின்­றன. 

இவ்­வா­றான நிலையில் இலங்­கையின் செயற்­பா­டு­களில் மந்­த­க­தி­யான போக்கே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக மனித உரி­மைகள் பேர­வையும் சர்­வ­தேச நாடு­களும் குற்றம் சுமத்­தி­யுள்­ளன. அதனை நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அத்­துடன் மனித உரி­மைகள் பேர­வையின் அவ­ச­ரத்­திற்­கா­கவோ அல்­லது சர்­வ­தேச சிவில் அமைப்­பு­களின் தேவைக்­கா­கவோ  எம்மால் துரி­த­மாக எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க முடி­யாது. இது ஜன­நா­யக நாடு எனினும் தீர்­வுகள் குறித்து தீர்­மா­னங்கள் எடுக்கும் போது ஆழ­மாக சிந்­தித்து மெது­வா­கவே தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். 

அதேபோல் இதற்கு முன்னர் ஜெனி­வாவில் என்ன தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தாலும், என்ன வாக்­கு­று­தி­களை கொடுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அவற்­றை­யெல்லாம் இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற அவ­சியம் எமக்கு இல்லை. நாம் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களை இலங்கை அர­சியல் அமைப்பின் பிர­கா­ரமே முன்­னெ­டுப்போம். சர்­வ­தேசம் கூறி­ய­தற்­காக எம்மால் இங்கு தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது. இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்­டினை தெளி­வாக முன்­வைத்­துள்ளோம். 

மேலும் சர்­வ­தேச நீதி­மன்ற கட்­ட­மைப்­பு­களை அனு­ம­தித்து அதன்­மூ­ல­மாக உண்­மை­களை கண்­ட­றியும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக பொறி­முறை செயற்­பா­டு­களை கையாள முடியும். சர்­வ­தேச தொழி­நுட்ப உத­வி­களை நாம் மறுக்­கவும் இல்லை. எனினும் நீதி விசா­ர­ணை­களை இலங்­கையை மூல­மாக மட்­டுமே இடம்­பெற முடியும். இதில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்கு இட­மில்லை. இந்த விட­யத்தில் சிவில் அமைப்­பு­களும், சர்­வ­தேச அமைப்­பு­களும் தமது கருத்­துக்­களை கூறி எம்மை விமர்­சிக்க முடியும். எனினும் அர­சாங்­க­மாக நாம் இந்தக் கருத்­து­களை செவி­ம­டுக்க தயா­ராக இல்லை. இதில் வாத விவா­தங்­க­ளுக்கும் ஒரு­போதும் இட­மில்லை. 

அதேபோல் இந்த நாட்டில் பயங்­க­ர­வாதம் நில­விய காலத்தில் பல நெருக்­க­டி­க­ளுக்கு நாம் முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. இலங்­கையின் பயங்­க­ர­வா­தமே சர்­வ­தேச பயங்­க­ர­வாத வளர்ச்­சிக்கு கூட துணை­நின்­றது எனலாம். அவ்­வா­றான ஒரு நிலையில் எமது இரா­ணுவம் பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டித்து இன்று யுத்தம் நிறை­வ­டைந்து பத்து ஆண்­டு­க­ளா­கின்­றன. மக்கள் அமை­தி­யாக வாழ்­கின்­றனர், இன ரீதி­யி­லான நெருக்­க­டிகள் எவையும் இல்­லாது நாடு அமை­தி­யான பய­ணத்­தினை முன்­னெ­டுத்து செல்­கின்­றது. அவ்­வாறு இருக்­கையில் சர்­வ­தேச நாடு­களில் உள்ள பயங்­க­ர­வாத ஆத­ரவு அமைப்­புகள் இலங்­கையை நெருக்­க­டிக்குள் தள்ளும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்த பயங்­க­ர­வாத அமைப்­புகள் எம்மை பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு  அழைக்­கின்­றன . எமக்கு அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்க எந்த அவ­சி­யமும் இல்லை. தமிழ் பயங்­க­ர­வாத ஆத­ரவு அமைப்­பு­களை சந்­திக்க நாம் தயா­ரா­கவும் இல்லை. அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தையும் இல்லை. 

மேலும் இம்­முறை இலங்கை அர­சாங்­க­மாக நாம் மிக­முக்­கிய தீர்­மானம் ஒன்றை முன்­னெ­டுத்­துள்ளோம். இலங்­கையில் யுத்தம் முடி­வுக்கு வந்து 10 ஆண்­டுகள் ஆகின்­றன. இந்த பத்து ஆண்­டு­களில்  பல்­வேறு மாற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன. யுத்த மனோ­நி­லையில் இருந்து மக்கள் விடு­பட்டு இன்று அமை­தி­யான நாட்­டுக்குள் இணைந்து வாழ்ந்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் நாம் தொடர்ந்தும்  மனித உரி­மைகள் பேர­வையில் குற்­ற­வா­ளி­யாக நிற்க முடி­யாது. மனித உரி­மைகள் குறித்து ஜெனி­வாவில் நாம் குற்­ற­வா­ளி­யாக நிற்கும் இறுதி சந்­தர்ப்பம் இது­வாகே அமைய வேண்டும். நாம் இன்று பொறுப்­புக்­கூ­றவும் நெருக்­க­டி­களை சந்­திக்­கவும் பயங்­க­ர­வா­தி­களே கார­ண­மாகும். அவர்கள் முன்­னி­லையில் குற்­ற­வா­ளி­க­ளாக நாம் நிற்­க­வேண்­டிய அவசியம் இல்லை. இலங்கையை ஒரு சாட்டாக வைத்துகொண்டு சர்வதேச அமைப்புகளும் மனித உரிமைகள் பேரவையும் அவர்களின் இருப்பினை தக்கவைக்க முயற்சித்து வருகின்றன . ஆகவே இனியும் நாம் மனித உரிமைகள் பேரவையில் சாட்சியாளர்களாக நிற்கவேண்டிய நிலைமையினை இந்தத் தடவையுடன்  நிறுத்திக்கொள்ள வேண்டும். வெளிவிவகார அமைச்சின் ஊடக அதற்கான பரந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். சர்வதேச நாடுகளில் இருக்கும் எமது நாட்டின் தூதுவர்கள்  மூலமாக எமது நிலைப்பாட்டினை வெளிபடுத்த  வேண்டும். சர்வதேச நாடுகளை எம்பக்கம்   ஈர்க்கும் நடவடிக்கைகளை கையாள வேண்டும் அதை விடுத்து  நாம் தொடர்ந்தும் குற்றவாளியாக  நிற்க முடியாது எனவும்  அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.