வாகன கொள்வனவாளர்களுக்கான, முக்கிய செய்தி..!
இலங்கையின் ரூபாய் நாணயப்பெறுமதி வீழ்ச்சி அடைகின்ற நிலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் ஒழுங்கமைப்பின் செயலாளர் கீர்த்தி குணவர்தன வழங்கிய விசேட செய்வியில் இந்த தகவலை வழங்கினார்.
இலங்கை ரூபாவிற்கு நிகரான பவுன் மற்றும் யென் போன்ற முக்கிய வெளிநாட்டு நாணய அலகுகளின் பெறுமதி அதிகரித்துள்ளது.
குறிப்பாக வாகன இறக்குமதியில் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற ஜப்பானிய யென்னாது நேற்றைய விலையைக் காட்டிலும் இன்றையதினம் 10 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது.
இவ்வாறான நிலையில் வாகனத்தின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கும் இந்த விலை அதிகரிப்பு அமுலாக்கப்படுமா? என்று நாம் கேள்வி எழுப்பினோம்.
இதற்கு பதில் வழங்கிய அவர்இ தற்போது இலங்கையில் வாகன விற்பனை என்பது பான் விற்பனையைப் போல மிகவும் வேகமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் கையிருப்பில் வாகனங்கள் எவையும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் தற்போது வாகன விற்பனை நிலையங்களில் இருக்கின்ற வாகனங்கள் பெரும்பாலும் ஓருநாளுக்கு முன்னதாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டனவாகவே உள்ளன.
எனவே இந்த விலை அதிகரிப்பானது தற்போதுள்ள வாகனங்களுக்கும் அமுலாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment