இலங்கையில் பெய்யவுள்ள, செயற்கை மழை
நாட்டில் விரைவில் செயற்கை மழை பெய்யச் செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
செயற்கை மழை பெய்யச் செய்யும் முறைமைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், நாட்டில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் இவ்வாறு செயற்கை மழை பெய்யக்கூடிய ஒர் நடைமுறையை அமுல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
செயற்கை மழையை பெய்யச் செய்யக்கூடிய நிபுணர் குழுவொன்று கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நீர்த்தேக்க பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததோடு, இலங்கையிலிருந்தும் நிபுணர் குழுவொன்று தாய்லாந்த சென்று செயற்கை மழை தொடர்பில் பயிற்சி பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment