திருடச் சென்றவர், ஆடையின்றி ஒடிய பரிதாபம்
அந்த பகுதி வீடொன்றில் வளர்க்கும் கோழி காலையில் வெளியே சென்று மாலையில் கூட்டுக்கும் வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தது.
கடந்த இரண்டு நாட்டுகளுக்கு முன்னர் அந்த கோழி கூட்டுக்கு அருகில் சென்றவர் நன்கு ஆரோக்கியமாக இருந்த 7 - 8 கோழிகளை சாக்குப்பை ஒன்றுக்குள் போட்டு கொண்டுள்ளார்.
அவ்வாறு போட்டு கொண்டவர் எவ்வித தடையுமின்றி அங்கிருந்து தப்பிச் முயன்றுள்ளார். திருடும் போது பெய்த மழையே அவர் தப்பிச் செல்ல உதவியாக இருந்துள்ளது.
மகிழ்ச்சியுடன் கோழிகளை எடுத்த சென்ற திருடன் ஏதோ ஒரு பெட்டியின் மீது மோதுண்டவுடன் அவர் மீது தேனீக்கள் மொய்க்க ஆரம்பித்துள்ளன.
தேனீகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாமல் திருடி வந்த கோழிகளை மாத்திரமன்றி, அணிந்திருந்த ஆடைகளையும் அவ்விடத்திலேயே விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
Post a Comment