தெல்தெனியவில் முஸ்லிம் கடைக்கு, தீ வைக்க முயற்சி
மடவளையை சேர்ந்த வர்த்தகர் முகம்மத் பமாஸ் நீண்டகாலமாக தெல்தெனியவில் கோழிக்கடை நடாத்தி வருபவர்.
இம்மாத ஆரம்பத்தில் தெல்தெனிய பிரதேசத்தில் ஆரம்பித்த கலவரத்தை அடுத்து இவர் தனது வர்த்தக நிலையத்தை மூடி வைத்திருந்தார். குறிப்பிட்ட கட்டிடத்தின் சொந்தக்காரர் பெரும்பான்மை இன நபராக இருந்த நிலையில், குறிப்பிட்ட கடையை தொடர்ந்தும் முஸ்லிம் ஒருவருக்கு வாடகைக்கு குடுக்க வேண்டாம் என அவருக்கும் சில அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.
இரண்டு வாரங்கள் கடையை மூடி வைத்திருந்த நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன்னர் கடையை மீண்டும் திறந்து வர்த்தக நடவடிக்கைகளை வழமை போல் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 11:45 அளவில் சில விஷமிகள் கடையின் கதவுக்கு அடியால் எரிபொருளை ஊற்றி தீவைக்க முயற்சி செய்துள்ளனர்.
தீப்பிடிக்க ஆரம்பித்த போது இதனை கண்ட பக்கத்து கடை ( பெரும்பான்மை இன) நபர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்து அனர்த்தத்தில் இருந்து பாதுகாத்துள்ளனர்.
இது தொடர்பில் பொலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டு பொலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் களத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடை சேதங்களில் இருந்து தப்பி இருந்தாலும் தாம் இதன்பிறகு இந்த வர்த்தக நிலையத்தை தொடர்ந்து நடாத்தும் எண்னம் இல்லை என உரிமையாளர் முகம்மத் பமாஸ் எம்மிடம் தெரிவித்தார்.
(மடவளை)
Post a Comment