Header Ads



"முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகள் தமிழர்கள் மீதும் மேற்கொள்ளப்படலாம்"

முஸ்லிம் இனத்திற்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இன வன்முறைகள் எதிர்காலத்தில் வட கிழக்கு தமிழ் மக்கள் மீதும் மேற்கொள்ளப்படலாம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். 

தேர்தல்கள் இடம்பெறும்போது யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியிலும் போட்டியிடலாம். எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கலாம். ஆனால் எமது இனத்திற்கொரு பிரச்சினை எனும் போது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அந்த வகையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பாரதி ஜெயராஜ் கூறிய கருத்து வரவேற்கத்தக்கதாகும் என வட மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 

அகில இலங்கை கம்பன் கலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கம்பன் விழா 2018 இன்று கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

6 comments:

  1. Unity is strength whatever level it is.

    ReplyDelete
  2. பாரதி ஜெயராஜ்,
    உங்களின் சகல நடவடிக்கைகளையும் நாங்கள் அறிவோம். இந்தியாவில் பாதி நாட்களும் இலங்கையில் பாதி நாட்களும் வாழும் நீங்கள் தமிழர்களுக்கு புத்திமதி உரைக்க தேவையில்லை. யாருடனோ யாருக்கோ உள்ள பிரச்னையை நீங்கள் தமிழர்களுடன் (இலங்கை தமிழர்களுடன் நீங்கள் இலங்கையை சேர்ந்தவர் அல்ல) முடிச்சு விட வேண்டாம். எத்தனையோ யுத்தங்கள் கலவரங்களை கண்ட எங்களுக்கு (உங்களுக்கு எல்லாம் புதிதே) எங்களை எவ்வாறு காக்க வேண்டும் என தெரியும். யாருடையோ நிகழ்ச்சி நிரலை இங்கே வந்து ஓதாதீர்கள். இது முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள பிரச்னை அதில் தமிழர்களை தூண்டி வீடாதீர்கள்.

    ReplyDelete
  3. There good people in all communities ( singhale.. tamil .. muslims) but every community has people like Anusath chandrabol too.

    We need people with human nature.

    ReplyDelete
  4. மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 17:11)

    ReplyDelete
  5. Anushanth சிங்கள பேரினவாத கத்தி கடிகார முல்லில் கட்டப்பட்ட ஒரு ஆயுதம். அது கடிகார முல்லோடு சேர்ந்தே சுத்திக்கொண்டிருக்கின்ன்றது. மீண்டும் ஒரு முறை உன் டமில்ஸ் பக்கம் திரும்பும் அதற்கு நூற்றாண்டுகள் தேவைபடாது சில வருடங்கள் போதும் பொறுத்திருந்து பார்

    ReplyDelete
  6. Neglect people like Anusanth... But there are many good people among Tamils and Sinhalease.

    We will work for the peace for peace loving people who may come from any race.

    ISLAM teaches us to spread PEACE,,, But not hates. BUT only fight the one who comes to harm you but not the rest who innocents.

    ReplyDelete

Powered by Blogger.