டெங்கு காய்ச்சலை தடுக்க புதிய App - இலங்கையில் இன்று அறிமுகம்
பாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (27) காலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
டெங்குவிலிருந்து விடுபட்ட குழந்தை டெங்குவிலிருந்து விடுபட்ட குழந்தை (Dengue Free Child) என்ற பெயரில் இச்செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.
கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நன்வங் Nanvang தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் மொபிடெல் ஶ்ரீலங்கா என்பன இப்புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன.
இச்செயலியினூடாக டெங்கு மற்றும் சந்தேகத்துக்கிடமான முறையில் பரவும் காய்ச்சல் தொடர்பான தகவல்களை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனூடாக அதிக காய்ச்சல் நிலவும் பிரதேசங்களுக்குச் சென்று உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் நுளம்புகள் முட்டையிடும் மற்றும் குடம்பிகளின் வசிப்பிடங்களை இடங்களை இல்லாதொழிப்பதற்கும் இயலுமாகும்.
மேலும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள பிரதேசங்களில் உள்ள பிள்ளைகள், பிள்ளைகளுக்கு விழிப்புணர்வூட்டவும் டெங்கு நோயின் அறிகுறிகள் அவர்களிடம் காணப்படுகிறதா என அவதானத்துடன் இருப்பதற்கும் இச்செயலியை பயன்படுத்த முடியும்.
தேசிய வைத்தியசாலையின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் தரவுகளுக்கமைய 2017ம் ஆண்டு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகைத்தந்த நோயாளர்களில் 30 வீதமானவர்கள் குழந்தைகளாவர். இலங்கையில் உள்ள சுமார் பத்தாயிரம் பாடசாலைகளில் 4.4 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். டெங்கு நுளம்புகள் காலை வேளையில் அதிகம் செயற்றிறனுடன் காணப்படுகின்றமையினால் அவர்களை டெங்கு நோயிலிருந்த காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தேசிய இணைப்பாளர் டொக்டர் ஹசித்த திசேரா தெரிவித்தார்.
இவ்வாண்டின் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் சுமார் 13,479 நோயாளர் பதிவாகியுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் கொடும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனினும் கடந்த ஆண்டு முதல் இரு மாதங்களில் 33,191 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நோயாளர்கள் இவ்வாண்டு 50 வீழ்ச்சி காணப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, இலங்கை டெலிகொம் தலைவர் குமாரசிறி சிறிசேன, சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் சரத் அமுணுகம ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post a Comment