Header Ads



பால்மாவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கிறது

குழந்தைகள் பால்மா தவிர்ந்த ஏனைய அனைத்து பால்மாக்களின் விலைகளையும் அதிகரிக்கவாழ்க்கைச் செலவுகள் குழு அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது..

இந்த விலை அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்காலத்தில் வெளியிடஉள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துச் செல்வதன் காரணமாக இலங்கையில் அதன்விலையை அதிகரிக்க வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையிடம் பால்மாஇறக்குமதியாளர்கள் கோரியுள்ளன.

இதையடுத்து, குறித்த கோரிக்கையை வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் நுகர்வோர்அதிகார சபை முன்வைத்துள்ளது.

இதன்போது ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்கவாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கி உள்ளதாக நுகர்வோர் அதிகார சபைதெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.