மே 7 ஆம் திகதி, அரச விடுமுறை தினமாக பிரகடனம்
சர்வதேச தொழிலாளர் தினம் இலங்கையில் கொண்டாடப்படவுள்ள மே 7 ஆம் திகதி, அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான கோரிக்கை அறிக்கையை தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு அனுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.என். சில்வாவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் கோரிக்கையின் பிரகாரம், மே மாதம் 7 ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.
வெசாக் வாரத்தை முன்னிட்டு, சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டங்களை மே 7 ஆம் திகதி பிற்போடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment