Header Ads



இலங்கையில் இம்முறை 7 ஆம் திகதியே மேதினம்

இலங்கையில், சர்வதேச தொழிலாளர் தினத்தை மே மாதம் 7ஆம் திகதியன்று அனுஷ்டிப்பதற்கான தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

வெசாக் உற்சவத்தை முன்னிட்டே, இம்முறை தொழிலாளர் தினத்தை, 7ஆம் திகதியன்று அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (27) கூடிய அமைச்சரவை கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான வெசாக் போயா தினங்கள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியும், மே மாதம் 1ஆம் திகதியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாநாயகர்களின் கோரிக்கைக்கு அமையவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.