கனடா பள்ளிவாசலுக்குள் 6 பேரைக் கொன்றேன் - குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் Alexandre Bissonnette (28) என்னும் கனடா நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் Quebecஇல் உள்ள மசூதி ஒன்றில் திடீரென நுழைந்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினான்.
இதில் ஆறு பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர், படுகாயமடைந்தவர்களில் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலையில் இருக்கிறார்.
இந்நிலையில் Alexandre மனம் மாறி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். “என்னுடைய செயலுக்காக வெட்கப்படுகிறேன், நான் ஒரு தீவிரவாதியோ இஸ்லாமியர்களை வெறுப்பவனோ அல்ல” என்று அவன் Quebec நீதிமன்றம் ஒன்றில் தெரிவித்தான்.
தனது குற்றத்தை அவன் ஒப்புக்கொண்டுள்ளதால் அவனுக்கு 150 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த செய்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடையே மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கியுள்ளது.
“எங்களுக்கு இந்த வார்த்தைகள் போதாது, அவன் செய்த குற்றங்கள் அனைத்தையும் அவனுடைய வார்த்தைகள் சமாதானப்படுத்தாது. எங்களுக்கு ஒரு பெரிய விளக்கத்தை அவன் கொடுக்க வேண்டும்” என்று Quebec மசூதியின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவனது சக மாணவரான Vincent Boissoneault, Alexandre பிற நாட்டவர்களை வெறுப்பவனாக இருப்பான் என்று தான் நினைக்கவில்லை என்றும், அவன் சற்று இன வெறுப்பு உடையவன்தான் என்றாலும் கொலை செய்யுமளவிற்கு மோசமான குணமுடையவனாக இருப்பான் என்று எண்ணவில்லை” என்றும் கூறியுள்ளார்.
Post a Comment