"5 ஆம் திகதி ஏற்படப்போகும், தலைவிதிக்கு தயாராக இருங்கள்"
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தாலும் அதனை தோற்கடிக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து அதனை வெற்றி பெற செய்து காட்டுமாறும் நளின் பண்டார சவால் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் ஒருவர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தால், அதற்கு மறுநாள் அதாவது ஏப்ரல் 5ஆம் திகதி அவருக்கு ஏற்பட போகும் தலைவிதிக்கு தயாராக இருக்க வேண்டும்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க இணங்கியுள்ளதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment