Header Ads



4 ஆம் திகதி நடைபெறவுள்ளதை, பொறுத்திருந்து பாருங்கள் - கபீர்

எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள மாற்றத்தைப் பொறுத்திருந்து பார்க்குமாறும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

மாவனல்லைப் பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் விடுத்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

எமது கட்சியின் தலைமைத்துவம் குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்துக்கு செல்வதில்லை. வேறு கட்சிகளில் அடுத்த தலைவர் யார் என்பதை எழுதிக் காட்ட முடியும். ஐ.தே.கட்சியில் அவ்வாறு முடியாது. இதனால்தான், மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக மாற முடிந்தது.

நாம் எங்கு பிறந்தோம். எமது குடும்பப் பின்னணி என்ன என்று பார்க்க மாட்டோம். எதிர்வரும் நாட்களில் ஐ.தே.கட்சியின் சகல பதவிகளும் மாற்றமடையும்.

நாடு கோரும் எந்தவொரு தலைமைத்துவத்தையும் வழங்க முடியுமான ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள மாற்றத்தைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. பல கள்வர்கள் நாட்டைச்சூறையாடி மற்ற கள்வர்கள் நாட்டை அடியோடு இல்லாமல் செய்து களவாடத்திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த கள்ளக்கூட்டம் ஆட்சியைக் கைப்பற்றும். அப்போது நாட்டு மக்களும்,நாடும் அதள பாதாளக்குழியில்.இலங்கையின் அரசியல் மாற்றத்தின் பிரதிபலன் அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. UNP has missed the good opportunity to bring a new political culture during this Yahapalanya. Now changing the pillows will not solve the problmes faced by the country.

    ReplyDelete

Powered by Blogger.