மாகந்துர மதூசின் கட்டளைகளை, நிறைவேற்றிய 3 பேர் 6 கைக்குண்டுகளுடன் கைது
மாகந்துர மதூஷ் டுபாயில் தலைமறைவாகியிருந்த காலத்தில் அவருடன் சேர்ந்து கொழும்பில் பாதாள நடவடிக்கைகளில் ஈடுபட்ட கெசல்வத்தை தினுக என்ற பாதள உலக குழு தலைவரின் உறவினர்கள் இருவரும் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் வாழைத்தோட்டம் - முகாந்திரம் பகுதியில் வைத்து இன்று -29- அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு கைக்குண்டுகளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தினுக என்பவரின் சிறிய தாயும், அவரது சகோதரரும், வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த ஒருவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து வழங்கப்படும் ஆணைகளை நடைமுறைப்படுத்தி, இலங்கையில் இடம்பெற்ற பாதாள நடவடிக்கைகளுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள தினுகவின் சிறிய தாயின் கணவரும், போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Post a Comment