2 சிங்கள தீவிரவாத, இயக்கங்கள் இணைகின்றன...!
கடும் சிங்கள பௌத்த இனவாத கொள்கைகளை உடைய சிங்களே மற்றும் மஹாசோன் பலகாய ஆகியன இணைந்து புதிய கட்சியொன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளன.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் மஹாசோன் பலகாய அமைப்பிற்கு நேரடித் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மஹாசோன் பலகாயவும் சிங்களே இயக்கமும் கூட்டாக இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளன.
தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ளும் நோக்கில் கட்சி பதிவொன்றுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடம் விண்ணப்பித்துள்ளதாக இரண்டு அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.
Post a Comment