தந்தை முன் பதவியேற்ற 2 உறுப்பினர்கள்
சிலாபம் நகரசபைக்கு தெரிவாகி உள்ள 2 உறுப்பினர்கள் தமது தந்தைமார் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சிலாபம் நகரசபைக்கு மெல்புர வட்டாரத்தில் போட்டியிட்ட வலிமுனி மெண்டிஸ் துஷான் சத்துரங்க அபேசேகர மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலதிக பட்டியலில் தெரிவான கம்மமெ லியனகே ஜோசப் மெவான் டிலான் பெரேரா ஆகியோரே இவ்வாறு தமது தந்தையர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
துஷான் அபேசேகர தனது தந்தையான புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகர முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
டிலான் பெரேரா, தனது தந்தையான முன்னாள் அமைச்சர் நியோமால் பெரேரா முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
Politics is not a family business. Stop this nonsense, if you want to develop this country
ReplyDelete