ஒரே நாளில், 2879 பேர் கைது - பொலிசார் அதிரடி
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2879 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 04.00 மணி முதல் காலை 08.00 மணி வரை இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு சம்பவம் மூலம் 7516 வழக்குகள் போக்குவரத்து குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 266 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1031 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
அத்துடன் வேறு பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 800 பேரும், ஹெரோய்ன் போதைவஸ்து வைத்திருந்த 667 பேரும் உள்ளடங்குகின்றனர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
Post a Comment