பொய் செய்திகளை வெளியிட்டால், 10 ஆண்டு சிறைத்தண்டனை
பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்க வகையில் புதிய சட்டத்தை பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ளது.
மலேசியாவில் பொய்யான செய்திகளை சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களின் மூலம் வெளியிடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என புதிய சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை பிரதமர் நஜப் ரசாக் அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டது. பொய்யான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்தை தெரிவிக்கும் உரிமை பாதுக்காக்கப்படும்.
பொய்யான செய்தி என்பது செய்தி, தகவல், அறிக்கை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது வீடியோ மற்றும் ஒலிக்கோவையாகக் கூட இருக்கலாம்.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அவர்கள் வெளியிடும் செய்தி மலேசியர்களை பாதிக்கும் எனில் அவர்களும் இந்த சட்டத்தின் படி தண்டிக்கப்படுவர். இதன் பின் பொதுமக்கள் மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் செய்திகளை பதிவு செய்வார்கள்.
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 49:6)
www.tamililquran.com