Header Ads



1 ஆம் தரத்தில் மாணவரை சேர்ப்பதற்காக, இலஞ்சம் பெற்ற அதிபருக்கு சிறை

மாத்தளை விஜய வித்தியாலயத்தில் முதலாம் தரத்துக்கு மாணவரை சேர்த்துக்கொள்வதற்காக, இரண்டு இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரி அதில் 1 ½ இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிற்காக, பாடசாலை அதிபருக்கு  சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் அபராதமாக 20,000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவரை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையில் போதே, மாணவரின் தந்தையிடம்  அதிபர் குறித்த தொகையினை இலஞ்சமாக பெற்றுள்ளார்.

மாத்தளை விஜய வித்தியாலயத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிபராக கடமையாற்றிய கலுஆராச்சிகே தயாவதி (47) என்பருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. அதிபர் பராலமன்ற உறுப்பினராக இருந்தால் தப்பித்து இருப்பார்

    ReplyDelete
  2. பிடிபடாதோரை யார் பிடிப்பது,லஞ்சம் வாங்கிவிட்டு தலையில தொப்பி,முகத்தில தாடி இவக இறைவிசுவாசியாம்.இதற்கு ஒத்துழைத்த அனைவரும் பாவகாரர்கள்.இவர்களைக் காப்பாற்றுவோர் அவரைவிட மோசமானவர்.

    ReplyDelete

Powered by Blogger.