பல்டியடிக்க UNP 15 எம்.பிக்கள் தயார் - நிஷாந்த முத்துஹெட்டிகம
தனி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஐக்கிய தேசியக்கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியு்ன் இணைந்து கொள்ள உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வெற்றிகரமான நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று -15- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். ஐக்கிய தேசியக்கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியாது.
ஐக்கிய தேசியக்கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணையவுள்ளனர். எமக்கு முட்டுக்கொடுக்க ஆட்கள் இருக்கின்றனர்.
இதனால், நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைப்போம். ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து விலகி வாருங்கள், நாம் இணைய தயார் என்று முன்னாள் ஜனாதிபதி எங்களுக்கு கூறினார்.
மக்கள் சக்தி கூட்டு எதிர்க்கட்சியிடம் உள்ளது. நாங்கள் இரண்டு தரப்பும் இணைவது ஆச்சரியமான விடயமல்ல. நாங்கள் ஒரே அணி. இரண்டரை வருடங்கள் பிரிந்து இருந்தோம்.
அடுத்த இரண்டரை வருடங்களுக்கு பணம், சிறப்புரிமைகளை எதிர்பாராது, இரண்டு தரப்பும் இணைந்து செயற்பட இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைப்போம்.
எம்முடன் இணையவுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட மாட்டேன் எனவும் நிஷாந்த முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment