இன்றும் STF அதிரடி - சண்டைக்கு சென்று கொண்டிருந்து 5 பாதாள குழு உறுப்பினர்கள் கைது
தெமட்டகொடை பகுதியில் நவீன ரக மோட்டார் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த பிரபல பாதாள உலக குழு உறுப்பினர்கள் ஐந்து பேரை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
முகத்துவாரம் பகுதியில் பிரபல பாதாள உலக தலைவனாக கருதப்படும் வெல்லே சாரங்கவின் சகாக்கள் எனக் கருதப்படும் ஐவரையே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்படும் போது, அவர்களிடம் 8 வாள்களும், மூன்று இராணுவ சீருடைத் தொகுதிகளும் இருந்ததாக பொலிஸ் அதிரடிப் படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த பாதாள உலகக் குழு, தமக்கு எதிரான மற்றொரு குழுவினருக்கு எதிராக குற்றம் ஒன்றினை அரங்கேற்றும் நோக்குடன் இவ்வாறு சென்றுகொண்டிருந்துள்ளமை தொடர்பில் சந்தேகிக்கும் படியான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்ற நிலையில், சந்தேக நபர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment