Header Ads



ரணிலுக்கு எதிரான சதித்திட்டம் அம்பலம், காட்டிக்கொடுத்த இளம் Mp

-Dc-

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவது தொடர்பாக நடைபெறும் இரகசிய கலந்துரையாடல்களின் தகவல்கள் பிரதமருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து ஐ.தே.க.வின் தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், அதில் ஒன்று கடந்த 25ம் திகதி கொழும்பில் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிகவும் கவனமாக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உடனடியாக அலரிமாளிகைக்குச் சென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தகவலைத் தெரியப்படுத்தியுள்ளார். மேலும் அலரிமாளிகையில் இருக்கும் போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஸ்பீக்கரை ஓன் செய்து பிரதமரும் செவிமடுக்குமாறும் செய்துள்ளார். குறித்த கலந்துரையாடலில் பங்கெடுத்தவர்கள் தொடர்பான தகவல்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்  சகோதரமொழி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.