BMW காரை நம்பி, ஏமாந்த இலங்கையர்கள்
பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் ஆடம்பர கார் ஒன்று பரிசாக வழங்கப்படுவதாக ஏமாற்றி இலங்கையில் பாரிய மோசடி நடவடிக்கை இடம்பெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள BMW மோட்டார் வாகன நிறுவனத்தில் நடைபெற்ற போட்டியில் 60 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு மோட்டார் வாகனம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படும்.
இது தொடர்பாக இலங்கையிலுள்ள பலருக்கு குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பண மோசடி செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கும்பல் மற்றும் நபர் ஒருவர் கையடக்க தொலைபேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்பி பணம் சம்பாதித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த குறுந்தகவல் அனுராதபுரம் மற்றும் சுற்றியுள்ள நபர்களின் தொலைபேசிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த பெறுமதியான பரிசை பெற்றுகொள்வதற்காக ஈஷி கேஷ் மூலம் பணம் செலுத்துமாறு கோரி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்கள் முழுவதும் பிழையான ஆங்கிலத்தை பயன்படுத்தி குறுந்தகவல் அனுப்பி, மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“உங்கள் தொலைபேசி இலக்கம் 2018ஆம் ஆண்டு 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனம் ஒன்றை வென்றுள்ளது. அதற்கான பரிசை பெற்றுக்கொள்வதற்காக உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம், விலாசம், தொழில் ஆகிய விடயங்களை bmwd¾w2@gmail.com எனற மின்னஞசல் முகவரிக்கு அனுப்புமாறு குறுந்தகவல் அனுபப்பட்டுள்ளது.
அந்த குறுந்தகவலின் பின்னர் மின்னஞசல் அனுப்பும் வாடிக்கையாளர்களிடம் மோட்டார் வாகனத்திற்கான ஆவணங்களுக்காக 15000 - 20000 ரூபாய் பணத்தை ஈஷி கேஷ் அனுப்புமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பலர் ஏமாற்றமடைந்து பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் இது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
i got this kind of phone call
ReplyDelete