இலங்கையில் செயற்கை மழை - நிபுணர்கள் நாட்டுக்கு வருகை
செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து தொழிநுட்ப நிபுணர்குழு இன்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக மின்சக்தி மீள்புதுப்பிக்த் தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த குழுவினர் இன்றும் நாளையும், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 59 வீதம் வரை குறைவடைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுவதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
இலங்கை இப்பொழுதுதான் செயற்கை மழை பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்துள்ளது. சீனாவில் கடந்த 30வருடங்களாக இந்த தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டு கடந்து 4 வருடங்களுக்கு முன்பு செயற்கை மழை பெய்விக்கும் எல்லா ஏற்பாடுகளும் முடிவடைந்த போதிலும் மழை பெய்யவில்லை. அது சீனர்களுக்கு பெரிய ஆச்சரியத்தையும் செலவையும் ஏற்படுத்தியது. எனவே அதன் காரணங்களை ஆராயத் தொடங்கினர். ஆராய்ச்சியின் முடிவு மேலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. ஆய்வாளர்கள், அவர்களுடைய ஆச்சரியமான கருத்தைத் தெரிவித்தனர். அதாவது கடந்த 25 வருடங்களாக செயற்கை மழை பெய்விக்கும் பகுதிகளில் மக்கள் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் தான் அங்கு செயற்கை மழை பெய்யாமல் இருப்பதற்குத் தடையாக அமைந்தது. அது என்ன? அவர்களு டைய வாயிலிருந்து வௌிவரும் வார்த்தைகள், பரஸ்பரம் பழகும்போது அவர்களுடைய கீழ்த்தரமான நடத்தைகளும் தான் செயற்கை மழை பெய்யாமைக்குக் காரணம் என கண்டுபிடித்தனர். மற்றவர்கள் பற்றி குறைபேசுவது, தகாத வார்த்தைப் பிரயோகம் போன்றவை மழைமுகில்கள் கருக்கட்ட தடையாக அமைகின்றன என்ற உண்மை வௌியாகிவிட்டது. எனவே,இங்கு பயங்கர செலவு செய்து இந்த மழையைப் பெய்வித்தால் இலங்கையில் செயற்கை மழை சாத்தியமாகுமா என்பது கியுபாவிலிருந்து டெங்கு நோய் கிருமியை அழிக்க செலவுசெய்த கோடான கோடி பணத்தைப் போல் கானல் நீராகிவிடுமா? இந்த கேள்வியை வாசகர்களுக்கு விடுகிறேன். அதேநேரம் நூஹ்(அலை) தங்கள் சமூகத்துக்குக் கூறிய உபதேசத்தையும் ஞாபகப்படுத்துகிறேன். اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا . يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا . وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا ) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவன் வானத்திலிருந்து மழையைப் பொழிவான்.உங்களுக்கு செல்வத்தையும் குழந்தைப்பாக்கியத்தையும் வழங்குவான்....
ReplyDelete