Header Ads



தூக்கம் குறைந்தால், ஆண்மைக்கு பாதிப்பு - ஆய்வில் கண்டுபிடிப்பு

குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல காரணங்கள் உள்ளன.

இதில் புதிதாக விந்தணுவிலுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை நிர்ணயம் செய்வதில் ஆண்களின் தூக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

‘மேற்கத்திய நாடுகளில் ஆண்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. அதோடு விந்தகத்தில் கட்டிகள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்த காரணிகள் அவர்கள் தந்தையாகும் தகுதியை குறைக்கிறது’ என்கிறார் டென்மார்க்கிலுள்ள பேராசிரியர் நீல்ஸ் ஷாகிபேக்.

சீனாவின் சாங்சிங் மாநிலத்திலுள்ள 3-வது ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 796 ஆண்களிடமிருந்து இந்த ஆய்வுக்காக விந்தணுக்கள் பெறப்பட்டது.

அவர்களின் தூங்கும் நேரமும் அதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் ஆறரை மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களின் விந்தணுக்களில் டி.என்.ஏ.வின் தரம் 30 சதவிகிதம் குறைந்திருந்தது.

தூக்கம் குறைந்தவர்களுக்கு இனப்பெருக்கத்தைத் தூண்டும் டெஸ்டோஸ்ட்டீரான் ஹார்மோன் அதிகம் உருவாவதில்லை என்பது இதற்கு முந்தைய ஆய்வு
களிலும் கூறப்பட்டுள்ளது. அது மீண்டும் இந்த ஆய்வின் மூலம் உறுதியாகி உள்ளது. ஒரு நாளைக்கு 7 மணி முதல் ஏழரை மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, வாழ்க்கை முறை மாற்றங்களால் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிற இன்றைய இளைஞர்கள், எதிர்கால நலன் கருதி 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம் என்று பரிந்துரைத்திருக்கிறது இந்த ஆய்வு.

1 comment:

  1. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.
    (அல்குர்ஆன் : 6:96)

    ReplyDelete

Powered by Blogger.