"நாட்டுக்கு நகைச்சுவை வழங்கும் கோமாளிகள்"
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு நகைச்சுவை வழங்கும் கோமாளியாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ராஜகிரியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமர் கடந்த காலம் முழுவதும் எடுத்த முடிவுகள் தோல்வியில் முடிந்ததை முழு நாடும் கண்டது.
மத்திய வங்கியின் ஆளுநரை நியமித்தார், அவர் முழு நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்படைய செய்து விட்டு நாட்டை விட்டே சென்று விட்டார். பிணை முறி விவகாரம் தொடர்பான பொறுப்பை ஏற்க மறுக்கிறார். இறுதியில் ரவி கருணாநாயக்கவை பழிகொடுத்து விட்டு கையை உடைத்துக்கொண்டார்.
ரணில் விக்ரமசிங்கவிடம் சட்டம், ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இது என்ன பைத்தியகாரத்தனம். இது திருடனின் தாயிடமே மைவெளிச்சம் பார்ப்பதற்கு ஈடானது எனவும் மைத்திரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment