Header Ads



கறுப்பு பட்டியலில் இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் பணப் பறிமாற்றல் நடவடிக்கைக்கு ஆபத்தான கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தவிர துனிசியா, ட்ரெனிடெட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளும் இந்த கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலங்கையும் கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தப் பட்டியலுக்கு ஆதரவாக 357 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் அதற்கு எதிராக 283 வாக்குகள் கிடைத்துள்ளன. அதேவேளை 26 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்பு பட்டியலில் இருந்து குறித்த நாடுகளை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் தேவை என்பது கூறத்தக்கது. 

பணம் தூய்மையாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கல் உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையிலேயே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.