Header Ads



மகிந்த மீண்டும், அதிகாரத்திற்கு வந்தால்..? சம்பிக்க அச்சம்

தாமரை மொட்டு பெற்றுள்ள வெற்றி காரணமாக நாட்டில் வன்முறை தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு கட்சியான பொதுஜன பெரமுண கட்சியின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் பின்னர் கூட இவ்வாறான நிலைமைகள் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டும் அமைச்சர் ரணவக, குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும் பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட சட்டவிரோத காரியங்களிலும் வன்முறையிலும் இறங்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறானவர்களுக்கு நாட்டின் அதிகாரம் கிடைக்கப் பெற்றால் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதற்கான முன் உதாரணம்தான் இது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து செயட்படுகின்றார்

    ReplyDelete

Powered by Blogger.