என்னைக் கொல்லுங்கள், பாராளுமன்றில் பந்துல
கடந்த கால செயற்பாடுகளைக் கையில் எடுக்கப்படுமாயின், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை மீண்டும் ஆராய வேண்டுமென சவால் விடுத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக நான் வாசிக்கின்றேன். முடிந்தால் அதற்கு முன்னர் என்னை கொல்லுங்கள் என்றும் சவால் விடுத்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இந்த அரசாங்கத்தின் ஊழல்களை முழுமையாக மறைக்க மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை களங்கப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“தேசிய வீரர்கள் அனைவரும் ஒருகாலத்தில் அவமானங்களையும், அழுத்தங்களையும் சந்தித்தவர்கள். ஆனால் இன்று அவர்களின் சிலைகள் தான் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவும் இந்த நாட்டின் மாற்றத்தை ஏற்படுத்திய தேசிய வீரர். அவரை அவமானப்படுத்த வேண்டாம். இது நாட்டுக்கும், மக்களுக்கும் செய்யும் அவமானமாகும்.
“இவர்களின் ஊழல் மோடிகளின் விளைவுகள் அடுத்த ஆண்டு தொடக்கம் தெரியவரும். அத்துடன், மத்திய வங்கியின் செயற்பாடுகளை தவறான சித்திரிக்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலமாக இலங்கையின் பொருளாதாரம் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும். சர்வதேசம் எம்மீதான நம்பிக்கையை இழக்கும். சர்வதேச முதலீடுகள் முழுமையாகத் தடுக்கப்படும். ஆகவே, தவறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்” என்றார்.
Post a Comment