Header Ads



அரசியல் குழப்பங்களினால், வீழ்ந்தது ரூபா

சிறிலங்காவில் அரசியல் உறுதித்தன்மையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை ஒட்டிய அரசியல் குழப்பங்கள், சிறிலங்காவின் அரசியலில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதனால் அரசாங்க பங்கு சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

அத்துடன், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பும் சரியத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்தின் இறுதி வேலை நாளான, பெப்ரவரி 2ஆம் நாள், அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு, 155.94 ரூபாவாக இருந்தது.

சுதந்திர நாள் விடுமுறைகளுக்குப் பின் நேற்று வங்கிகள் திறக்கப்பட்ட போது, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு, 156.13 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அண்மைய நாட்களாக சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.