"தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நடந்த, முதல் சந்தர்ப்பம் இது"
சில வாரங்களுக்கு முன்னர் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மூன்று சிங்கம் குட்டிகள் பிறந்துள்ளன.
தாய் மற்றும் குட்டிகள் நலமாக உள்ளதாக மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குட்டிகளின் தாய் குட்டிகளை பெற்றெடுக்கும் வரையில் தந்தை சிங்கம் அருகிலேயே இருந்து பாதுகாத்ததனை அவதானிக்க முடிந்துள்ளது.
மூன்று சிங்கம் குட்டிகளில் , ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குட்டிகள் உள்ளடங்குகின்றது. கடந்த மாதம் 22ஆம் திகதி Thor மற்றும் Naledy என்ற சிங்கங்களுக்கு இந்த குட்டிகள் பிறந்துள்ளன.
2013 ஆம் ஆண்டு Naledy என்ற சிங்கம் ஜேர்மனியில் உள்ள Tierpark Hagenbeck பூங்காவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. Thor என்ற சிங்கம் கொரியாவில் உள்ள Seoul பூங்காவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குட்டிகள் பிறக்கும் போது தந்தை சிங்கம் ஒன்று அருகில் இருந்த முதல் சந்தர்ப்பம் இதுவென தெஹிவளை மிருகக்காட்சி சாலை அதிகாரி தினுஷிகா தெரிவித்துள்ளார்.
பொதுவாக சிங்கம் குட்டிகள் பிறக்கும் போது, ஆண் சிங்கம், குட்டிகள் மீது ஆக்ரோஷமான குணத்தையே வெளிப்படுத்தும். இதன் காரணமாகவே குட்டிகளிடம் இருந்து தந்தைகள் பிரித்து தானியாக வைக்கப்படுவார்கள்.
எனினும் இந்த சிங்கம் அவ்வாறு செயற்படவில்லை எனவும் குட்டிகளை தாய் சிங்கம் பெறும் வரை தந்தை சிங்கம் பாதுகாத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இந்த முறை குட்டிகள், தந்தையிடம் இருந்து பிரிக்கவில்லை என குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment