தாமரைக் கோபுரம், அருகே தீ
கொழும்பு- டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில், தாமரைக் கோபுரத்துக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீப்பரவலானது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட எரிவாயு கசிவால் இந்த தீபரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீயினால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment