Header Ads



பட்டயக்கணக்கறிஞர் ஆளுநர், சபை உறுப்பினராக அஸீஸ்

இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிர்வாக ஆளுநர்கள் சபை உறுப்பினர்களில் ஒருவராக எஸ்.ஏ. அஸீஸ் அரசாங்கத்தினால்  நியமிக்கப்பட்டார்.

இவருக்கான  நியமனப்பத்திரம் அரசாங்கத்தின் சார்பாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியூதீனால் வழங்கி வைக்கப்பட்டது.  

இக்கவுன்சில் இலங்கை நாணயச்சபை மற்றும் பங்குபரிவர்தனை ஆனைக்குழு என்பவற்றில்  பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது.இவர் அண்மைக்காலங்களில் இலங்கை தேசிய வரவு செலவுத்திட்டங்கள் தயாரிப்பதிலும் நெறிப்படுத்துவதிலும் செயற்பட்டுள்ளதுடன் நிதி வரி மற்றும் பொருதார விடயங்கள் தொடர்பாக  இவரின் ஆக்கங்கள்  இலங்கையில் மட்டுமில்லாது சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.  சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவும் இவருக்கு இப்பதவியை வழங்குமாறு சிபார்சு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

ஒரு முதுமானி சிரேஷட பட்டயக்கணக்கறிஞராகவும் முகாமைத்துவக்கணக்காளராகவும் விளங்கும் இவர் அமெரிக்கா நிவ்ய்ஜேர்ஸியில் உள்ள உலகப்புகழ்பெற்ற சிபி.ஏ. நிருவாக உறுப்புரிமையையும் பெற்றவராவார். இவர் கல்ஹின்னையை சேர்ந்த காலம் சென்றவர்களான ஹபீப் லெப்பே முஹம்மத் ஸாலிஹ் (ரஸ்ஸாக்) ஹாஜியானி பாதுமா பீபீ ஆகியோரின் புதல்வராவார். 

No comments

Powered by Blogger.