Header Ads



மீன் சாப்பிட்ட, பெண் உயிரிழப்பு

மீன் ஒன்றை சமைத்து உட்கொண்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் தங்கபுரம் - அளம்பில் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் கௌசல்யா (வயது 38) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிருடன் வலையில் சிக்கிய மீன் ஒன்றை குறித்த பெண் நேற்று முன்தினம் சமைத்து உண்டுள்ளார். பின்னர் அவர் சில மணி நேரங்களில் மயக்கமடைந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மீன் சினையின் நச்சுத்தாக்கத்திற்கு உள்ளாகிய இவர் உயிரிழந்திருக்கக்கூடும் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் குறித்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.