Header Ads



இறைநியதிகள் ஒருபோதும் மாறுவதில்லை, அதை மீறுபவர்கள் வெல்வதில்லை.


-சிராஜுல்ஹஸன்-

தொன்று தொட்டே மனித வரலாறு இரண்டு விஷயங்களுக்காகத்தான் ஏங்கிக் கொண்டிருக்கிறது.

ஒன்று- விடுதலை. 

இன்னொன்று- அமைதி.

உலகில் தோன்றிய எல்லாத் தத்துவங்களும் சித்தாந்தங்களும் கொள்கைகளும் ‘இஸம்’களும் இந்த இரண்டையும் நான் தருகிறேன் என்று சொல்லிக் கொண்டுதான் மக்களிடையே உலா வந்தன.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்ந்த மக்கள் மிகுந்த ஆர்வத் துடனும் ஏக்கத்துடனும் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றிப் பார்த்தனர்.

ஏமாற்றம்தான் மிச்சம்!

அவர்கள் எதிர்பார்த்த இரண்டும் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல,

இந்தக் கொள்கைகளைப் பின்பற்றியதாலேயே மேலும் மேலும் பல சிக்கல்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாயினர்.

தனக்கு விடுதலையையும் அமைதியையும் யாரேனும் தருவார்களா என்று மனித இனம் இப்போதும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறது.

மனித மூளையில் உதித்த சித்தாந்தங்கள் எல்லாம் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில்-

இன்று மனித இனத்தின் முன் இருப்பது ஒரே ஒரு வழிமுறை தான். அதுதான்- ‘இறைவழிகாட்டுதல்.’

‘வணக்கத்திற்கும் அடிபணிவதற்கும் உரியவன் ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை.

முஹம்மத்(ஸல்) அந்த ஏக இறைவனின் திருத்தூதர் ஆவார்’ எனும் இந்த முழக்கத்தில் இரண்டு சொற்றொடர்கள் இருக்கின்றன.

முதல் சொற்றொடர் மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் எல்லாத் தத்துவங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் மரண அடி கொடுத்து மனிதனுக்கு உண்மையான விடுதலையை அளிக்கிறது.

இரண்டாவது சொற்றொடர், விடுதலை அடைந்த மனிதன் அமைதியைப் பெற எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான அழகிய முன்மாதிரியை வழங்குகிறது.

உலகை உற்றுப் பாருங்கள்.

பல்வேறு தத்துவங்களைப் பின்பற்றி, அங்கே இங்கே அலைந்து, அடிபட்டு, உதைபட்டு மீண்டும் இந்த உன்னத வழிக்கே உலகம் திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு சொற்றொடர்களில்தான் உங்களுடைய உண்மையான விடுதலையும் அமைதியும் உள்ளன என்பது இறைவன் வகுத்த நியதி.

1 comment:

  1. Islam is the only religion acknowledged by Allah.ya Allah get the souls of me & my family out of our body while being Muslims with your outright contentment! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.