Header Ads



அரசாங்கம் வங்குரோத்துக்கு சென்றுள்ளது - போட்டுத்தாக்கும் மஹிந்த

சீட்டு கட்டை கூட ஒழுங்காக கலைத்து போட முடியாதது போல், அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து ஊடகமொன்றிட்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சீட்டை கட்டை கூட ஒழுக்காக கலைத்து போட முடியாத அளவுக்கு அரசாங்கம் வங்குரோத்து நிலைமைக்கு சென்றுள்ளமை தெளிவாகியுள்ளது.

இந்த அமைச்சரவை மாற்றம் நகைச்சுவை நாடகம் என அரசாங்கத்தின் அமைச்சர்கள் பகிரங்கமாக கூறியுள்ளனர்.

அமைச்சர்களுக்கே இது நகைச்சுவை நாடகம் என்றால், மக்கள் இதனை எப்படி உணர்ந்திருப்பார்கள்.

மக்களும், நாடும் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்கு இந்த அமைச்சரவை மாற்றம் தீர்வுகளை ஏற்படுத்தி கொடுக்காது.

அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவில்லை என்பதை மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காண்பித்தனர்.

இதனால், அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்து விட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். மக்களின் ஆதரவில்லாத அரசாங்கத்திற்கு முன்னோக்கிய பயணம் கிடையாது.

முதலீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதால், நாடும் மேலும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால், நாடு மேலும் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.