Header Ads



அமைச்சரவையை மறுசீரமைப்பது தவறில்லை, ஆனால்...?

அரசாங்கம் அமைச்சரவையை மறுசீரமைப்பதில் தவறில்லையென்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இதேவேளை அமைச்சரவை மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ,

அரசாங்கம் அமைச்சரவையை புதிதாக மாற்றியமைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் அமைச்சரவையின் எண்ணிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவது கட்டாயமாகும்.

பாரிய அமைச்சரவையொன்று அமைக்கப்படும் பட்சத்தில் அதனைப் பராமரிப்பதற்காக பெருந்தொகைப் பணம் செலவழிக்க நேரிடும்.

நமது நாட்டைப் பொறுத்தவரை பாரிய அமைச்சரவையொன்று அமைக்கப்பட வேண்டிய அவசியமேயில்லை.

இந்த அரசாங்கம் ஒன்றைச் சொன்னால் செய்வது அதற்கு நேரெதிராக உள்ளது. ஆகவே இவர்கள் சொல்லும் எதையும் நம்பமுடியாது.

ஆனால் நாட்டில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதை நாங்கள் அவதானித்துக் கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. தண்ணீருக்கு ஒருவர், தேயிலைக்கு ஒருவர், ஏன் சீனிக்கு ஒருவர் என சாதாரண தேயிலை ஒன்றை பருகுவதற்கே மூன்று அமைச்சர்களை நியமித்து உலகிலேயே அதிக தொகை கொண்ட அமைச்சரவையை நியமித்து கின்னஸ் சாதனை படைத்தவன் நீ. அமைச்சரவை எண்ணிக்கை சம்பந்தமாக கவனிக்க வேண்டுமென கூறுகிறாயே தலைவா. நீ மனிதனே இல்லேய்யா, தரமான பச்சோந்தி (கடுஸ்ஸா)

    ReplyDelete
  2. Not like your mega cabinet.
    Not to worry.

    ReplyDelete

Powered by Blogger.