"தாய் மண்ணிலிருந்து, முஸ்லீம் தேசமொன்றிற்கான கவலை இது..."
-மொஹமட் நசாய்-
கதறி அழும் நினைவுகளும்
துக்கம் விசாரிக்கும்
கனவுகளுமாக எம் நினைவு.
தாய் மண்ணிலிருந்து அந்நிய முஸ்லீம் தேசமொன்றின் கவலை இது.
சிதறிகிடக்கும் உடல்களும்,
தரை மட்டமாக்கப்பட்ட வீடுகளும்
திரும்பி வருமா மீண்டும்??
எங்கும் அழு குரல்,
பாவம்
அப்பாவி மக்கள்
என்ன செய்வார்கள்?.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்
முஸ்லீம் நாடுகள்
வீணான
சந்தர்ப்பத்தில் தான்
வீராப்பாய் பேசும்.
இது சுயநல உலகம்
வருத்தப்படாதீர்கள்.
நாசகார நச்சு குண்டு
சிரியர்களின்
உயிர்களை காவு கொண்டாலும், "இழக்கவில்லை"
அவர்கள்' ஈமானிய உறுதியை....
இது ஈமானிய தேசம்
ஈஸா (அலை) இறங்கும் தேசம்.
கவலைப்படாதீர்கள்.
நாளை ஒரு நாள் மலரும்
இன்ஷா அல்லாஹ்
உங்களுக்காக.....
அப்போது
இந்த ஆசாத்தும்' அவன் படைகளும்
நிச்சயமாக அழிந்திருக்கும்.
பிர் அவ்ன்னும், கொடுங்கோல்
நும்ரூத்தும் அழிந்ததை போல.
அது வரை எம் சிரிய தேச மக்களே!!!
ஈமானில் உறுதியாய் இருங்கள்.
Post a Comment