Header Ads



தப்பினார் உதயங்க வீரதுங்க - இன்டர்போல் விடுவித்ததாக சொல்கிறார்


சர்வதேச காவல்துறையின் அனுமதியுடன் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச குற்றச்சாட்டின்மை மற்றும் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படாமை உறுதி செய்யப்பட்டதால் தன்னை சர்வதேச காவல்துறை விடுவித்ததாக அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அவர் டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அமெரிக்கா நோக்கி பயணிக்கிவிருந்த நிலையில் சர்வதேச காவல்துறையினரால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு காவல்துறை குழுவொன்று டுபாய் பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிக் வானூர்தி கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் பணச்சலவை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக காவல்துறை நிதிமோசடி விசாரண பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை நினைவு கூறத்தக்கது.

1 comment:

  1. சர்வதேச அரங்கில் ஒரு குற்றவாளியைக் கைது செய்ய எந்நவகையிலான முறையைக் கையாளவேண்டும் என்பது இலங்கை சட்டத்துறைக்கு சரியாகப் புரியாமை அல்லது வேண்டுமென்றே இத்தகைய கள்வர்களை கைதுசெய்வதில் ஆட்சியின் பிரதானிகளின் திரைமறைவிலான திட்டங்கள் தான் இத்தகைய கள்வர்கள் தப்பிச் செல்லக்காரணம். சிவப்பு கட்சி கூறுவது போல் இது பொதுமக்களை ஏமாற்றும் கபாளி நாடகம். இந்த கள்வர்களுக்கு நாளைமறுநாள் தேர்தலில் மக்கள் பாடம் படித்துக் கொடுக்கமாட்டார்களா?

    ReplyDelete

Powered by Blogger.