பள்ளிவாசலுக்கு சேதம், வாகனங்களுக்கு தீ வைப்பு, முஸ்லிம்கள் விரட்டியடிப்பு (படங்கள்)
அம்பாறையில் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து, அப்பகுதியிலுள்ள பள்ளிவாசல் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
ஜப்னா முஸ்லிம் முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பள்ளிவாசல் தேசம் அடைந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறுகையில்,
பிரதேசத்தில் பதற்றம் தொடருகிறது. பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்கள் சிலர் விரட்டப்பட்டுள்ளார்கள். அங்கு பொலிஸார் விரைந்துள்ளனர். முஸ்லிம்களுக்குரிய வாகனங்கள் சில தீயிடப்பட்டுள்ளன.
நான் தற்போது அம்பாறை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். அங்கு போய் சேர்ந்ததும் இதுபற்றிய தகவல்களை பதிவேற்றுகிறேன் என்றார்.
Post a Comment