Header Ads



பஸ்களில் வந்து வன்முறை, முஸ்லிம்கள் மீது பெரும் அராஜகம், குர்ஆனுக்கும் தீ வைப்பு (படங்கள்)


அம்பாறை ஜும்மா🕌பள்ளிவாசல்  இனவாதிகளால் நேற்றிரவு தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு மக்களிடம் ஒரு சில பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.  

அத்தாக்குதல் தொடர்பாகா அப்பிரதேச வாசியொருவர் கூறுகையில்,

அவர்கள் இரண்டு பஸ்களில் வந்தனர்.  அவர்கள் ஆரம்பத்தில் பள்ளிவாசலின் சுற்றுமதிலை தள்ளி உடைத்தார்கள். நாங்கள் பள்ளிவாசலில் தங்கிருந்தோம். பின்னர் அவர்கள் அங்கிருந்த வாகனங்கள்மீதும் எங்கள்மீதும் தக்கினார்கள். பின்னர் பள்ளிவாசலில் இருந்த சில குர்ஆண்களுக்கு தீ வைத்தார்கள். 

மேலும்  இப்பகுதியில் மூன்று முஸ்லிம்  ஹோட்டல்கள்மீதும் அவர் தாக்கி நாசம் செய்துள்ளார்கள் . இது தொடர்பாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணை மேட்கொண்டும் வருகின்றார்கள்.   இதில் அவர்கள் தாக்கும்  போது #எங்கட மக்களின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்கு உணவு போட்டா  கொடுக்கின்றீர்கள்  என்னு கூறிய நிலையில் அவர்கள் தாக்கியதாகவும் கூறினார்.

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக்










No comments

Powered by Blogger.