Header Ads



வாள் கொடுத்த விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் நடராஜனுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதுவராகப் பணியாற்றும் நடராஜனின் பணிக்காலம் முடிவடைந்து, இம்மாதம் நாடு திரும்பவுள்ளார்.

அவரை கௌரவிக்கும் வகையில், நேற்றுஇரவு யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் பிரிவு உபசார நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, வரதராஜப்பெருமாள் மற்றும் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், மதகுருமார், கல்வியாளர்கள், பிரமுகர்கள் எனப பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது,  இந்தியத் துணைத் தூதுவராகப் பணயாற்றி விடைபெற்றுச் செல்லும் நடராஜனுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலை வேலைபபாடுகளுடன் கூடிய வாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.


No comments

Powered by Blogger.