தன்னுயிர் கொடுத்து, தங்கையை காப்பாற்றிய சிறுமி
சிரியா அரசு நிகழ்த்திய இராசாயன தாக்குதலில், தன் உயிரைக் கொடுத்து தங்கை உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது.
அந்தவகையில், சிரியாவின் கிழக்கு கெளட்டா பகுதியில் பொதுமக்களுக்கு எதிராக சிரிய அரசு தடை செய்த ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
இந்த இராசாயன தாக்குதலில் ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர் பலர் கொல்லப்பட்டனர்.
அப்போது இராசாயன தாக்குதலில் பாதிப்படைந்த ஒரு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் தங்கையை காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செயற்கை ஆக்ஸிஜன் கொடுத்து கொண்டிருந்தார். ஆனால் அதிகப்படியான இராசாயன தாக்குதலால் அந்த சிறுமி உயிரிழந்தார்.
தன் உயிரைக் கொடுத்து தங்கை உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
الله اكبر
ReplyDelete